டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-09-24 22:30 GMT
தென்காசி,

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்காசி மாவட்ட சமத்துவ மக்கள் கழக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் லூர்து நாடார் தலைமையில், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

ஒன்றிய செயலாளர்கள் தவசிமுத்து, ஜெயராஜ், அருள் செல்வம், தனலட்சுமி, மாவட்ட அவைத் தலைவர் ரிச்சர்ட் சிங், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் செல்வன், மாவட்ட துணை செயலாளர் ராஜா, நகர செயலாளர் சுப்பிரமணியன், பொன்னுமணி, ஜோதிலட்சுமி, தங்கம்மாள், சந்திரா, மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், தென்காசி மாவட்ட தலைநகரில் உள்ள புகழ்பெற்ற காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு ராஜகோபுரத்தை கட்டித் தந்து தென்காசிக்கு பெருமை சேர்த்தவரும், அனைவராலும் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று அன்புடன் அழைக்கப்படும் சின்னய்யா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவைப் போற்றும் வகையில், தென்காசியில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும்.

குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா காலத்தில் மூடப்பட்ட தென்காசி தினசரி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரி லட்சுமி தாயம்மாள் திருமண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு தி.மு.க. மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், 1,300 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹக்கீம், குறும்பலாபேரி செயலாளர் டால்டன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, முன்னாள் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் அருள், கீழப்பாவூர் முன்னாள் யூனியன் தலைவர் சுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்