தஞ்சைக்கு தினமும் 100 டன் வந்த நிலையில் வடமாநிலங்களில் மழையால் வெங்காயம் வரத்து 30 டன்னாக குறைந்தது
தஞ்சைக்கு தினமும் 100 டன் வெங்காயம் வந்த நிலையில் தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் மழையால் வெங்காயம் வரத்து 30 டன்னாக குறைந்தது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் உள்ள காமராஜர் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, மாராட்டியம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பல்லாரி, சின்ன வெங்காயம் போன்றவை விற்பனைக்கு வரும். மேலும் தஞ்சையில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊட்டி, நிலக்கோட்டை, தேனி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த வாரம் வரை ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. இதனால் தஞ்சை மார்க்கெட்டில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மழையால் பாதிப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு வெங்காயம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்யாததால் வெளி மாநிலங்களுக்கு வெங்காயம் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் வெங்காயம் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.
தஞ்சை மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் 100 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக 30 டன் அளவுக்குத்தான் வெங்காயம் வருகிறது. 3-ல் 1 பங்குக்கும் குறைவாக வெங்காயம் வரத்து இருப்பதால் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தரத்தில் சிறிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை பாதிப்பு
இது குறித்து வெங்காயம் மொத்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில், “வெளி மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் சேதம் ஏற்பட்டுள்ளதால் தஞ்சைக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக ஓட்டல்கள் இன்னும் பழைய நிலையை எட்டவில்லை. இதனால் வியாபாரம் குறைவாகத்தான் இருந்தது. தற்போது விலை உயர்வு காரணமாக விற்பனை மேலும் குறைந்துள்ளது.”என்றார்.