கோவில்பட்டியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி,
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஊதிய குழு அமைக்க வேண்டும். ஊதிய குழுக்களின் நியாயமான பரிந்துரைகளை பரிசீலனை செய்ய வேண்டும். கூட்டுறவு விற்பனை சங்கம், மொத்த விற்பனை பண்டக சாலை, பிரதம பண்டக சாலை ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழு அமைக்க வேண்டும், அனைத்து கூட்டுறவு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர்கள் சங்கரநாராயணன், காளிமுத்து, மாவட்ட பொருளாளர் ஷேக்முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.