வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சிறப்பு துணைத்தேர்வை 2,599 பேர் எழுதினர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சிறப்பு துணைத்தேர்வை 2,599 பேர் எழுதினர் 758 பேர் பங்கேற்கவில்லை.

Update: 2020-09-22 05:42 GMT
வேலூர்,

தமிழகத்தில் 8, 10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும், தொடக்ககல்வி பட்டய சிறப்பு துணைத்தேர்வுகள் நடத்த அரசு தேர்வாணையம் உத்தரவிட்டது. முதல் கட்டமாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும், தொடக்க கல்வி பட்டய 2-ம் ஆண்டு துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 26 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வை 2,280 மாணவர்களும், 31 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 908 மாணவர்களும், 6 மையங்களில் 169 தொடக்க கல்வி பட்டய 2-ம் ஆண்டு சிறப்பு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கினர்.

தேர்வர்களின் உடல் வெப்ப பரிசோதனையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களில் 1,651 பேர் எழுதினர். 629 பேர் பங்கேற்கவில்லை. பிளஸ்-2 மாணவர்களில் 839 பேர் எழுதினார்கள். 69 பேர் எழுதவில்லை. தொடக்க கல்வி பட்டய 2-ம் ஆண்டு தேர்வை 109 பேர் எழுதினர். 60 பேர் பங்கேற்கவில்லை. சிறப்பு துணைத்தேர்வை 2,599 பேர் எழுதினார்கள். 758 பேர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு வருகிற 28-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதன்பின்னர் வருகிற 29-ந் தேதி முதல் 8, பிளஸ்-1 வகுப்பு, தொடக்க கல்வி பட்டய முதலாமாண்டு சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்