கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி வந்தடைந்தது வினாடிக்கு 100 கனஅடியாக வருகிறது
கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நேற்று காலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. ஏரிக்கு வினாடிக்கு 100 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை மக்களின் குடிநீர்தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை சேமிக்கலாம். இந்நிலையில் பூண்டி ஏரி வறண்டதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடந்த இரு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அதன் பரில் கடந்த 18-ந்தேதியன்று காலை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வந்தடைந்தது.
தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர்கள் பிரதீஷ், சதீஷ், பழனிகுமார், பரத், பவித்ரன், ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்சுராயமய்யா, ஓபுல்தாஸ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி கிருஷ்ணா தண்ணீரை வரவேற்றனர்.
முதலில் வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை 330 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர் 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று காலை 6 மணிக்கு பூண்டி ஏரி வந்தடைந்தது. வினாடிக்கு 100 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருப்பதால் வறண்டு கிடந்த பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.