தனியார்மயத்துக்கு எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் போராட்டம்
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவையில் மின்சார வினியோகத்தை தனியாருக்கு ஒப்படைக்கப்போவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதா ராமன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மின்துறை ஊழியர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையே மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி மின்துறை ஊழியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று அவர்கள் புதுவையின் 4 பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி ஊழியர்கள் சுதேசி மில் அருகே ராஜேந்திரன் தலைமையிலும், ஆம்பூர் சாலை குபேர் திடலில் இருந்து மதிவாணன் தலைமையிலும், பெரியார் சிலை பகுதியில் இருந்து வேல்முருகன் தலைமையிலும், தலைமை அலுவலகத்திலிருந்து என்ஜினீயர் அச்சுதானந்தன் தலைமையிலும் கூடினார்கள்.
அங்கிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் அவர்களை ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் அங்கேயே மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன்பின் சங்க முக்கிய நிர்வாகிகள் மட்டும் அங்கிருந்து புதுவை தலைமை தபால் நிலையத்துக்கு வந்தனர். அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேபோல் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே மின்துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் வேல்மயில் தலைமையில் மின்துறை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் புதுவை மின் துறையை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.