எனது வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொள்ளவில்லை ஐகோர்ட்டில் நடிகை கங்கனா மனு
எனது வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொள்ளவில்லை என ஐகோர்ட்டில் நடிகை கங்கனா கூறியுள்ளார்.
மும்பை,
நடிகை கங்கனா ரணாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதை அடுத்து சிவசேனாவிற்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த 9-ந் தேதி சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி பாந்திராவில் உள்ள கங்கனாவின் பங்களா வீட்டின் ஒரு பகுதியை இடித்து தள்ளியது.
இந்தநிலையில் வீட்டை இடிதத்ததற்கு மாநகராட்சி ரூ.2 கோடி இழப்பீடு தரவேண்டும் என கங்கனா ஐகோர்ட்டில் முறையிட்டார். அதற்கு கோர்ட்டில் பதில் அளித்த மாநகராட்சி சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் அவரது வீட்டை இடித்ததாக கூறியது. மேலும் அபராதத்துடன் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இந்தநிலையில் நடிகை கங்கனா மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள மனுவில், தனது பங்களா வீட்டில் சட்டவிரோதமாக எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளார். அந்த மனுவில், “சட்டவிரோதமாக கூடுதலாகவோ, புதுப்பிப்பு பணிகளையோ செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்” என கூறியுள்ளார். இந்த மனு மீதான இறுதி விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது.