தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
கோபி அருகே தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுடைய மகன் பிரகதீஸ்வரன் (வயது 20). கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் பிரகதீஸ்வரன் 2-ம் ஆண்டு பி.ஏ. படித்து வந்தார்.
இந்த நிலையில் பிரகதீஸ்வரனுக்கும், அவருடைய தங்கைக்கும் இடையே நேற்று திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் பிரகதீஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே கருப்புசாமியும், அம்பிகாவும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டனர்.
யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள விட்டத்தில் சுடிதார் துப்பட்டாவால் பிரகதீஸ்வரன் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் பிரகதீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.