கொரோனாவுக்கு இளம்பெண் உள்பட 10 பேர் பலி புதிதாக 471 பேருக்கு தொற்று பாதிப்பு

புதுவையில் நேற்று கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 471 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-20 23:59 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 675 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 471 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று ஒரே நாளில் 347 பேர் குணமடைந்து உள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 1லட்சத்து 35 ஆயிரத்து 259 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 765 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 ஆயிரத்து 909 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,832 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 ஆயிரத்து 556 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுவையில் இதுவரை 458 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 392 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 30 பேர் காரைக்காலையும், 36 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது அரசு ஆஸ்பத்திரியில் பிருந்தாவனம் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்த 76 வயது மூதாட்டியும், முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணும், திருக்கனூர் புதுநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த 75 வயது முதியவரும் பலியாகி உள்ளனர். ஜிப்மரில் கொசப்பாளையம் வேல்முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த 57 வயது ஆணும், நல்லூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த 66 வயது முதியவரும் பலியாகி உள்ளனர்.

புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வில்லியனூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த 61 வயது முதியவரும், சண்முகாபுரம் ஜீவன்நகர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணும், முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 88 வயது மூதாட்டியும், பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 74 வயது முதியவரும், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 67 வயது மூதாட்டியும் பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 2 சதவீதமாகவும், குணமடைவது 76.59 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்