அரியலூர் மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 26 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் 38 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 26 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-09-19 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் வட்டாரத்தில் 11 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 5 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 6 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 4 பேருக்கும் என மொத்தம் 26 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,622 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து 1,505 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 382 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர்

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரியலூர் நகராட்சி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தலா 6 பேருக்கும், அரியலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 4 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 38 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,451 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 2,609 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 496 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்