ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 247 ஆக உயர்ந்தது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 247 ஆக உயர்ந்தது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 98 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 2,269 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.