கடைசி பயணமாக மும்பையில் இருந்து குஜராத் செல்லும் ‘ஐ.என்.எஸ். விராட்’ போர்க்கப்பல்

கடைசி பயணமாக ஐ.என்.எஸ். விராட் போர் கப்பல் மும்பையில் இருந்து குஜராத் செல்ல உள்ளது.

Update: 2020-09-18 23:36 GMT
மும்பை,

இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கி போர் கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றது. அதன்பிறகு அந்த கப்பல் மும்பை நேவல் டக்யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. விராட் போர் கப்பலை அருங்காட்சியகமாகவோ, மிதக்கும் ஓட்டலாக மாற்றவோ அரசு திட்டமிட்டது. ஆனால் அது கைகூடாமல் போனது.

இந்தநிலையில் அந்த கப்பலை உடைக்கும் ஒப்பந்தத்தை குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் குழுமம் பெற்று உள்ளது. எனவே விராட் கப்பல் உடைப்பதற்காக மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள அலாங் பகுதிக்கு இன்று (சனிக்கிழமை) கொண்டு செல்லப்பட உள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா என 2 நாட்டு கடற்படைக்கு 58 ஆண்டுகள் பணியாற்றிய ஐ.என்.எஸ். விராட்டின் கடைசி பயணமாக இது இருக்க போகிறது.

மேலும் செய்திகள்