மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-09-18 15:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 8,835 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

5,042 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13,244 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 29 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 229 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் லிங்ரோட்டை சேர்ந்த 60 வயது மூதாட்டி, பெத்தனாட்சிநகரை சேர்ந்த 15 வயது சிறுவன், சாத்தூர், நல்லமுத்தம்பட்டி, முள்ளிசெவல், சத்திரப்பட்டி, மாதாங்கோவில்பட்டி, கீழசெல்லையாபுரம், கீழராஜகுலராமன், சிவந்திப்பட்டி, ராஜகோபாலபுரம், முகவூர், ஆசில்லாபுரம், தேசிகாபுரம், சேத்தூர், கிருஷ்ணாபுரம், அக்கண்ணாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரியாபட்டியை சேர்ந்த 3 பேர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, சுந்தரகுடும்பன்பட்டி, கிழவிக்குளம், பிள்ளையார்குளம், கோணப்பனேந்தல், கல்லூரணி, விருதுநகர் ஸ்ரீநகரை சேர்ந்த 60 வயது மூதாட்டி உள்பட மாவட்டத்தில் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14,809 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 2,000 முதல் 2,500 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் முற்றிலும் கிராமப்பகுதிகளில் உள்ளவர்களுக்கே பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

நகர் பகுதியில் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு சோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளதா? அல்லது நகர்பகுதிகளில் சோதனை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. தினசரி மாநில சுகாதாரத்துறையின் அறிக்கைக்கும், மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கைக்கும் பாதிக்கப்பட்டோர் பட்டியல் தொடர்பாக முரண்பாடு தொடர்கிறது. இதனை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மருத்துவ அறிக்கையில் வெளிப்படை தன்மை வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்