பிரதமர் மோடி பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி புதுவையில் நேற்று பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி,
நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. புதுவை லாஸ்பேட்டை தொகுதி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 700 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்களை வழங்கினார்.
லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகில் பாரதீய ஜனதா கொடியேற்றப்பட்டு கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. உழவர்கரை தொகுதியில் ரத்ததானம் செய்தனர். கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி வழங்கப்பட்டது.
முதலியார்பேட்டை தொகுதி சார்பில் கோர்ட்டு அருகில் துப்புரவு தொழிலாளர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் அரிசி மற்றும் காய்கறி, புத்தகப்பை ஆகியவற்றை பா.ஜ.க.வினர் வழங்கினர். உழவர்கரை மாவட்ட இளைஞர் அணி சார்பில் அரிசி மற்றும் காய்கறி வழங்கப்பட்டது.
காலாப்பட்டு முருகன் கோவிலில் தேர் இழுத்து சிறப்பு பூஜை நடத்தினர். முத்தியால்பேட்டை ஹயக்கிரீவர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதேபோல் சிறுபான்மை அணி சார்பில் நகர மாவட்டத்திற்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு புடவை, முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மை அணி தலைவர் விக்டர் விஜயராஜ் தலைமை தாங்கினார். ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட சின்னையாபுரம் பகுதியில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர் செல்வம், இளைஞர் அணி பொதுச்செயலாளர் வேல்முருகன், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் பேட்ரிக், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சோமசுந்தரம், உழவர்கரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஷாஜகான், மாவட்ட தலைவர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.