ஓசூர் அருகே, பெண்ணை கொன்று குழித்தோண்டி புதைப்பு - உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
ஓசூர் அருகே பெண்ணை கொன்று மர்ம நபர்கள் குழித்தோண்டி புதைத்த னர். உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் இருந்து சர்ஜாபுரம் செல்லும் சாலையில் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடல், கைகள் மேலே தெரிந்ததால் தெரு நாய்கள் கடித்து குதறியும், தின்று கொண்டும் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை பாகலூர் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்ததால் காயங்கள் உள்ளதா? என கண்டறிய முடியவில்லை.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த பெண்ணை மர்ம நபர்கள் வேறொரு இடத்தில் கொன்று உள்ளனர். பின்னர் உடலை இங்கு கொண்டு வந்து சாலையோரம் குழித்தோண்டி புதைத்து உள்ளனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்ணை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.