தவளக்குப்பம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
தவளக்குப்பம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்,
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை கொடிகட்டி பறந்தது. இந்த பழக்கத்துக்கு உள்ளூர் இளைஞர்கள், பள்ளி மாணவர்களும் அடிமையானதால், கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வராததால் கஞ்சா விற்பனை மந்தமானது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் பக்கம் கஞ்சா கும்பலின் பார்வை திரும்பியது.
அதன்படி மணவெளி, தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை போதை பொருட்கள் விற்கும் மையமாக சமூக விரோதிகள் மாற்றி வருகின்றனர். இதுபற்றி கேட்டால் பள்ளிக்கூட காவலாளி, சமூக ஆர்வலர்கள் மிரட்டப்படுகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர்.
கைது
இந்தநிலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் என்.ஆர். நகரில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் அறிந்து தவளக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித் தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில், கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத் என்ற தமிழரசன் (வயது 20), பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்த அரவிந்தன் (19) என்பதும், புதுவையை சேர்ந்த ஒருவரிடம் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, அதனை சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி சிறுவர்கள், இளைஞர்களுக்கு விற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா மற்றும் செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.