பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் புதுவையில் மோசடிக்கு வாய்ப்பில்லை சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி
புதுவையில் பிரதமரின் விவசாயிகளுக்கான உதவி திட்டத்தில் மோசடி நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநில பா.ஜ.க. சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் துணைத்தலைவர் மாநில பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத் தலைவர் அருள்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் பா.ஜ.க. முன் கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் பா.ஜ.க.வில் இணைந்தவாறு உள்ளனர். மற்ற கட்சிகளை விட கடந்த ஒரு மாதத்தில் அதிகமான இணைப்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ள ஒரே கட்சி பா.ஜ.க. மட்டுமே. இங்கு மோடி அலை வீசுகிறது.
இந்தமுறை தேர்தலில் யார் நின்றாலும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளன. கட்சியில் தீவிரமாக உழைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். எனவே அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். புதுச்சேரியில் 2021-ம் ஆண்டு கண்டிப்பாக ஊழலற்ற பா.ஜ.க. ஆட்சி மலரும். கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.
மோசடிக்கு வாய்ப்பில்லை
காரைக்காலில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும், கடந்த 4½ ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. மத்திய அரசின் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தவில்லை. பிரதமரின் கிசான் திட்டத்தில் காரைக்காலில் மட்டும்தான் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதால், புதுச்சேரியில் மோசடி நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.