மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட சாராயக்கடை ஊழியர் அடித்துக் கொலை மாணவர்கள் 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட சாராயக்கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-09-12 22:45 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செல்லூர் அகலங்கண்ணு சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 47). சாராயக்கடை ஊழியர். நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது செல்லூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த மகேந்திரன் (23), அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாலாஜி (19) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.

அவர்களை வழிமறித்த ரவிச்சந்திரன், ஏன் வேகமாக செல்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், ஜெய பாலாஜி இருவரும் சேர்ந்து ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்துபோனார்.

2 பேர் கைது

இந்த கொலை குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேந்திரன், ஜெயபாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் மகேந்திரன் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும், ஜெயபாலாஜி காரைக்கால் அரசு ஐ.டி.ஐ. யிலும் படித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்