மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி பெற முயற்சி நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி
மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி பெற முயற்சி செய்யப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் பாகமண்டலா அருகே தலைக்காவிரியில் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களை கடந்து ஒகேனக்கல் வழியாக பாய்ந்தோடி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகாப்புரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரு மாநகருக்கு குடிநீர் வினியோகிக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழக விவசாயிகளும், தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தொழில்நுட்ப குழு
கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆலமட்டி அணையை உயர்த்துவதால், சில கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும். அதில் ஓரிரு கிராமங்களை தண்ணீரில் மூழ்காதவாறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஒரு தொழில்நுட்ப குழு அமைக்கப்படும்.
கிருஷ்ணா மேல் அணை திட்டத்தின்-2 நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் ஏற்கனவே மனு தாக்கல் செய்தது. இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. உலக வங்கி உதவியுடன் ரூ.1,500 கோடி செலவில் அணைகளை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க மத்திய நீர்வள ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அணைகளை ஒட்டியுள்ள சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
48 ஏரிகள் நிரப்பப்படும்
கர்நாடகத்தில் தற்போது அமல்படுத்தப்படும் நீர்ப்பாசன திட்டங்களால் ஒரு லட்சம் எக்டேர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். நீர்ப்பாசனத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை நீர்ப்பாசன சாராத பணிகளுக்கு பயன்படுத்துவது இல்லை என்றும், பாசன வசதியை ஏற்படுத்தும் பணிகளுக்கு மட்டும் நிதியை செலவழிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. பத்ரா மேல் அணை திட்டத்தின் கீழ் சித்ரதுர்காவில் 61 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் 48 ஏரிகள் நிரப்பப்படும்.
பத்ரா மேல் அணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும். இந்த திட்ட அறிக்கை மத்திய நீர்ப்பாசனத்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் 31 கிலோ மீட்டர் வரையிலான திட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2021) பருவமழை காலத்திற்கு முன்பு நிறைவு செய்யப்படும். வேதா கால்வாய்க்கு சோதனை அடிப்படையில் தண்ணீர் விடப்படும்.
மேகதாது திட்டம்
கர்நாடக்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் புதிதாக 5 லட்சம் எக்டேர் நிலப்பரப்பிற்கு பாசன வசதியை ஏற்படுத்த 8 பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த நுண்ணிய நீர்ப்பாசன கொள்கை ஒன்றை உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் ரூ.9,000 கோடியில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி பெற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
வன உயிரினங்கள்
இந்த திட்டத்தால் 5,051 எக்டேர் வனப்பரப்பு நீரில் மூழ்கும். இதில் 3,181 ஹெக்டேர் வன உயிரினங்கள் வாழும் பகுதி ஆகும். இதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ். பிருந்தாவன் பூங்காவை ரூ.425 கோடியில் உலக தரத்திற்கு மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகள் 4 கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.