சஞ்சய் ராவத் எம்.பி.க்கு மிரட்டல் நடிகை கங்கனா ரணாவத் ரசிகர் கைது

சஞ்சய் ராவத் எம்.பி.க்கு மிரட்டல் விடுத்த நடிகை கங்கனா ரணாவத் ரசிகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-09-11 20:54 GMT
மும்பை,

கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மராட்டிய தலைநகர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு தெரிவித்த அவரது கருத்துக்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரணாவத்துக்கும், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கும் கடுமையான வார்த்தை போர் உண்டானது.

இந்த நிலையில், கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக அவரது ரசிகர் ஒருவர், சமூகவலைதளத்தில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டு உள்ளார்.

கைது

இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் சஞ்சய் ராவத்துக்கு மிரட்டல் விடுத்தது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பாலஷ் கோஷ் என்ற வாலிபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை போலீசார் கொல்கத்தா சென்று அந்த வாலிபரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்