ஓய்வூதியம் வழங்க கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முற்றுகை

ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை யிடப்பட்டது.

Update: 2020-09-11 06:15 GMT
கோவை,

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ராமநாதபுரத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை தொழி லாளர்கள் நேற்று முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னார்கள். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி (எல்.பி.எப்.), செல்வராஜ், பாலகிருஷ்ணன் (ஏ.ஐ.டி.யு.சி.), ஜி.மனோகரன், பழனிசாமி (எச்.எம்.எஸ்.), சிரஞ்சீவி (ஐ.என்.டி.யு.சி.), வேலுசாமி (சி.ஐ.டி.யு.) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

கட்டுமான தொழி லாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கு மாநில அரசால் நலவாரியம் ஏற்படுத்தப் பட்டது. அதன் மூலம் பல்வேறு நிதி மற்றும் சமூக பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியுள்ள, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனாலும் கடந்த 11 மாதமாக தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை தொழிலாளர்களுக்கு உடனடி யாக வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்யும் முறை ஆன் லைனாக மாற்றப்பட்டுள்ளது. இது கடினமானதாக உள்ளது. அதை எளிமைப்படுத்த வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்த கொரோனா ஊரடங்கு கால உதவித்தொகை இன்னும் ஆயிரக்கணக்கான வர்களுக்கு கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. எனவே அனைவருக்கும் நிவாரணம் முழுமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்