மராட்டியத்தில் மேலும் 448 பேர் கொரோனாவுக்கு பலி உயிரிழப்பு 28 ஆயிரத்தை தாண்டியது

மராட்டியத்தில் புதிதாக 448 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Update: 2020-09-10 19:34 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீயைவிட வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் 23 ஆயிரத்து 446 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 90 ஆயிரத்து 795 ஆகி உள்ளது.

இதில் 7 லட்சத்து 715 பேர் குணமடைந்து உள்ளனர். மாநிலத்தில் தொற்றில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 70.72 ஆக உள்ளது.

448 பேர் பலி

இதேபோல நேற்று மாநிலத்தில் புதிதாக 448 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது. மராட்டியத்தில் 28 ஆயிரத்து 282 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 49.74 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 16 லட்சத்து 30 ஆயிரத்து 701 பேர் வீடுகளிலும், 38 ஆயிரத்து 220 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை

இதற்கிடையே மும்பையில் நேற்று புதிய உச்சமாக 2 ஆயிரத்து 371 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 115 ஆகி உள்ளது. இதில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 112 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 26 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல நகரில் புதிதாக 38 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மும்பையில் 8 ஆயிரத்து 23 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 61 நாட்களாக உள்ளது. 79 சதவீதம் பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். மும்பையில் இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நகரில் 544 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 7 ஆயிரத்து 528 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்