சாலையை கடந்து செல்ல முயன்றபோது மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
சாலையை கடந்து செல்ல முயன்றபோது தான் பயணம் செய்த அதே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,
ஆவடி லாசர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 74). இவருடைய மனைவி மங்கையர்கரசி (68). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் வேலை இன்றி வீட்டில் இருந்த முருகேசனுக்கு திருமுல்லைவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை கிடைத்தது.
இன்னும் ஓரிரு தினங்களில் அங்கு வேலைக்கு செல்ல இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை பஸ் பாஸ் வாங்குவதற்காக ஆவடி பஸ் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர், செங்குன்றத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநகர பஸ்சில்(தடம் எண் 62) ஏறி வீட்டுக்கு சென்றார்.
பஸ் சக்கரத்தில் சிக்கினார்
அந்த பஸ் இரவு 7 மணியளவில் ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோவர்த்தனகிரி பஸ் நிறுத்தத்தில் நின்றது. பஸ்சில் இருந்து இறங்கிய முருகேசன், அந்த பஸ்சின் முன்புறமாக சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட அவர் பயணம் செய்த அதே மாநகர பஸ் முருகேசன் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவரது 2 கால்கள் மீதும் பஸ்சின் முன்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கியதால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
உயிரிழந்தார்
ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாகியும் வராததால் முருகேசனின் கால்களிலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது. அதன்பிறகு ஆவடியில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இரவு 8 மணி அளவில் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான பூந்தமல்லியை சேர்ந்த சங்கர் (55) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
ஆவடி, ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (76). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவர், நேற்று சைக்கிளில் ஆவடியில் இருந்து அம்பத்தூர் நோக்கி சி.டி.எச். சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லோகநாதன், ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காருடன் நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.