நாளைமுதல் கொடைக்கானலை சுற்றி பார்க்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவிப்பு

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-08 09:36 GMT
திண்டுக்கல்,

தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் நிலை அறிந்து தமிழக அரசு தற்போது சில தளர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

இதையடுத்து போக்குவரத்து தொழிற்சாலைகள் ஆகியவை இயங்க துவங்கியுள்ள நிலையில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத்துறைக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறுகையில்,

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர். வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்