சேலத்தில், சிலிண்டர் வெடித்து வாலிபர் பலி

சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் உடல் சிதறி வாலிபர் பலியானார்.

Update: 2020-09-04 22:30 GMT
சூரமங்கலம், 

திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாஸ்கர் (வயது 22). இவர் சேலம் குரங்குசாவடி அருகே அம்மாபாளையம் அவ்வைநகரில் உள்ள ஒரு தீயணைப்பான் கருவி தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பாஸ்கர் வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் 3 மணி அளவில் அங்கு உள்ள ஒரு சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்தது.

இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் உடல் சிதறி பலியான சம்பவத்தால் நேற்று மதியம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்