கல்வித்துறை அலுவலகத்தில் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி மாநில அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கல்வித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2020-09-04 20:37 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநில அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கல்வித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் துணை தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமை தாங்கினார். போராட்டத்தில் வின்சென்ட், கோபால் அழகிரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிலுவையில் உள்ள 9 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. அவர்கள் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி ஆசிரியர் தினமான இன்று (சனிக்கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்