பாதிக்கப்பட்ட 6-வது மந்திரி பால்வளத்துறை மந்திரிக்கு கொரோனா

மராட்டியத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-09-04 19:03 GMT
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. நாட்டிலேயே இங்கு தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் ஏற்கனவே மாநிலத்தில் ஜிதேந்திர அவாத், அசோக் சவான், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட 5 மந்திரிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மாநிலத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கால்நடை, பால்வளத்துறை மற்றும் விளையாட்டு துறை மந்திரி சுனில் கேதார் (வயது 59) ஆவார்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லோன்டே கூறுகையில், ‘‘மந்திரி சுனில் கேதாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு நேற்று முன்தினம் மாலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்’’ என்றாா்.

சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் கொரோனாவால் பாதிக்கப்படும் 6-வது மந்திரி சுனில் கேதார் ஆவார். இவர் விதர்பா கிழக்கு சாவ்னர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

மேலும் செய்திகள்