திருச்சியை சேர்ந்த பள்ளி நிர்வாகியிடம் நிலத்தை தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி சென்னை பிஷப் கைது
திருச்சியை சேர்ந்த பள்ளி நிர்வாகியிடம் நிலத்தை தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த பிஷப்பை திருச்சி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.
திருச்சி,
திருச்சியில் கமலா நிகேதன் என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் சத்தியமூர்த்தி. இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில், சென்னை வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்தவ சபையின் பிஷப் ஆக இருக்கும் எஸ்.டி.டேவிட் (வயது 55) என்பவர் தனக்கு சென்னையில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான ஒரு நிலத்தை பத்திரம் எழுதித்தருவதாக கூறி என்னிடம் ரூ.4 கோடி வாங்கினார். ஆனால் பேச்சுவார்த்தைப்படி அவர் எனக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை. இதுபற்றி நான் கேட்டபோது இழுத்தடித்து வந்தார். பணத்தையும் திரும்ப தரவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில், மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சின்னச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் ஒரு கட்டமாக சின்னச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று காலை சென்னைக்கு சென்று பிஷப் டேவிட்டை பிடித்து திருச்சிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், ரூ.4 கோடி மோசடி செய்ததாக நேற்று மாலை பிஷப் டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டீபன்சன், பன்னீர்செல்வம், சாமுவேல் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.