ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா; மேலும் ஒருவர் பலி இதுவரை சாவு எண்ணிக்கை 45 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இதுவரை சாவு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநகர் பகுதியில் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியை சேர்ந்த 83 வயது முதியவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 359 ஆக இருந்தது. இதில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 4 பேர் நேற்று பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 13 பேருக்கும், பெருந்துறை பகுதியை சேர்ந்த 12 பேருக்கும், கோபி மற்றும் நம்பியூர் பகுதிகளை சேர்ந்த தலா 5 பேருக்கும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், சென்னிமலை, பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பேருக்கும், பி.டி.பாளையம் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், அந்தியூர், பூலவாடி, சித்தோடு, செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அதே நேரம் நேற்று ஒரே நாளில் 74 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,171 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 45 பேர் இறந்துள்ள நிலையில், 2,259 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும், அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக போலீஸ் நிலையம் முன்பு கயிறு கட்டப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் வழக்கம்போல் அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.