ஈரோடு அருகே மோட்டார்சைக்கிள்கள்மீது அரசுபஸ் மோதியது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி - துக்கம் விசாரித்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்

ஈரோடு அருகே துக்கம் விசாரித்து விட்டு திரும்பிய போது அடுத்தடுத்து 2 மோட்டார்சைக்கிள்கள் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-09-03 22:05 GMT
மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சியை அடுத்த ஆலூத்துப் பாளையம் அருகே உள்ள பரமசிவபுரத்தை சேர்ந்தவர் மோகாம்புரி (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி மரகதம் (58).

இதேபோல் மொடக்குறிச்சி குளூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55). இவருடைய தாய் பாவாயம் மாள் (80). பாலசுப்பிரமணிய மும், மரகதமும் அண்ணன், தங்கை ஆவர்.

ஈரோட்டை அடுத்த சோலார் அம்மன்நகரை சேர்ந்த இவர்களுடைய உற வினர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே துக்கம் விசாரிப்பதற்காக மோகாம் புரியும், அவருடைய மனைவி மரகதமும் மோட்டார் சைக்கி ளில் சோலாருக்கு சென்றனர். இதேபோல் மற்றொரு மோட் டார் சைக்கிளில் மரகதத்தின் அண்ணன் பாலசுப்பிரமணி யும், தாய் பாவாயம்மாளும் சென்றனர். துக்கம் விசாரித்து விட்டு 4 பேரும் மொடக் குறிச்சிக்கு நேற்று காலை 8.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் ஈரோடு லக்கா புரம் வழியாக திரும்பி சென்று கொண் டிருந்தனர். அப்போது சிவகிரியில் இருந்து ஈரோட் டுக்கு அரசு டவுன்பஸ் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சை ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த மெரிட் பாபு (47) என்பவர் ஓட்டினார். மொடக்குறிச்சியை அடுத்த அய்யக்கவுண்டன்பாளையம் நெறிப்பாறை பகுதியை சேர்ந்த கண்ணுசாமி (40) கண்டக் டராக இருந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

லக்காபுரம் ஊராட்சி அலு வலகம் அருகே சென்றபோது அரசு பஸ் திடீரென நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து வந்த மோகாம் புரி, பாலசுப்பிரமணி ஆகி யோரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியதுடன், அருகில் உள்ள ரோட்டோர சுற்றுச் சுவர் மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் சுற்றுச் சுவர் இடிபாடு மற்றும் பஸ் சின் அடியில் ஒரு மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பாலசுப்பிரமணி, பாவா யம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதேபோல் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மோகாம்புரி, மரகதம் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தனர். விபத்து நடந்தபோது பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என அலறி துடித்தனர். சிலர் முன்பக்க இருக்கைகளின்மீது விழுந்தனர்.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பு ரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

மேலும் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் போலீ சார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் பஸ்சில் வந்த லக்காபுரத்தை சேர்ந்த ராஜா (45) என்பவரும் காயம் அடைந்தார். அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்