ராணிப்பேட்டையில், கார் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ராணிப்பேட்டையில் கார் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-02 22:15 GMT
சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). இவருக்கு சொந்தமான காரை ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (30) என்பவர் வாடகைக்கு எடுத்து, வேறு நபருக்கு அடமானம் வைத்து விட்டார். இதுகுறித்து வினோத்குமார் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உதயகுமார் இதேபோல் பலரிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் உதயகுமாரை கைது செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உதயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து உதயகுமார் குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்