கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-09-03 01:18 GMT
அச்சன்புதூர்,

மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் தலைமை தாங்கினார். செயலாளர்கள் சீனா, சேனா சர்தார், இம்ரான் கான், பொருளாளர் முஹம்மது நைனார், செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், ஷேக் முஹம்மது ஒலி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், செயலாளர் ராஜா முகம்மது, கடையநல்லூர் நகர தலைவர் யாசர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, பாப்புலர் பிரண்ட் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக 52 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இதேபோல் நெல்லை பேட்டையில் மல்லிமால் தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நெல்லை தொகுதி துணை தலைவர் ரிபாய் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் ஜெய்லானி வரவேற்றார். எஸ்.டி.டி.யு மாவட்ட துணை தலைவர் முகம்மது காசிம், சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முபாரக் அலி, வர்த்தக அணி மாவட்ட நிர்வாகி பீர், நெல்லை தொகுதி செயலாளர் காஜா மைதீன், பொருளாளர் காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 35 பேர் மீது பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்