திருவள்ளூர் மாவட்டத்தில் குறைவான அரசு பஸ்கள் இயக்கம் உடல் வெப்பத்தை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுபோக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று குறைவான அரசு பஸ்களே இயக்கப்பட்டன. மேலும் பயணிகள் கூட்டம் மிதமாகவே காணப்பட்டது.
திருவள்ளூர்,
தமிழக அரசு வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதையொட்டி, பஸ் மற்றும் ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை முழுமையாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1-ந் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் இயங்கும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து நேற்று 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்கள் திருவள்ளூரில் இருந்து திருத்தணி, அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டது. அப்போது பஸ்ஸில் வந்த பயணிகளுக்கு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் கிருமிநாசினி வழங்கியும், அவர்களுக்கு தெர்மல்ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பஸ்சுக்குள் பயணம் செய்ய அனுமதித்தனர்.
குறைவான அரசு பஸ்கள்
மேலும் கண்டக்டர்கள் பயணிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் உடல் வெப்பநிலையை ஒரு நோட்டு புத்தகத்தில் குறித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அரசு பஸ்கள் அரசின் வழிகாட்டு வழிகாட்டுதலின்படி பயணிகளை ஏற்றிச் சென்றனர். அதேபோல திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் மற்றும் மாநகர பஸ்கள் முழுவதும் இயங்கவில்லை. இதன் காரணமாக திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் மிதமாக காணப்பட்டது.
மேலும் அரசு பஸ்கள் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் முழுமையாக செயல்படாமல் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 90 பஸ்கள் உள்பட குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு பஸ் டிப்போவில் 37 பஸ்கள் உள்ளன. இவைகளை ஆந்திர மாநிலம் திருப்பதி, காளாஸ்திரி, சூளூர்பேட்டை, புதுச்சேரி, திருச்சி, கள்ளகுறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று முதல் பஸ்கள் இயங்க தொடங்கின.
வெப்ப பரிசோதனை
மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுப்படி ஊத்துக்கோட்டை பஸ் பணிமனையில் உள்ள 37 பஸ்களில் 5 பஸ்கள் மற்றும் இயக்கப்பட்டன. பஸ்களுக்கு கிறுமி நாசினி தெளிக்கப்பட்டது. முக கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டும் பஸ்களில் செல்ல அனுமதிக்கப்பட்டது. பஸ்சில் ஏறுவதற்கு முன் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை மேற்பொள்ளப்பட்டது. சமூக இடைவெளி விட்டு பயணிகள் உட்கார வைக்கப்பட்டனர்.
சென்னை- ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை, மாதர்பாக்கம்- செங்குன்றம் இடையே தாலா ஒரு பஸ்சும், ஊத்துக்கோட்டை-செங்குன்றம் இடையே 2 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பஸ்களில்
பயணித்தனர். இன்று(புதன்கிழமை) முதல் கூடுதல் பஸ்கள் இயக்க முயற்சி செய்யப்படும் என்று பணிமனை மேலாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.