நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி தேவைப்படுவதால் காங்கிரஸ் எழுச்சி பெற வேண்டும் சிவசேனா கருத்து
நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி தேவைப்படுவதால் காங்கிரஸ் எழுச்சி பெற வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
சிவசேனா எம்.பி.யும் சாம்னா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் காங்கிரஸ் தலைமை குறித்து நிலவி வரும் பிரச்சினை தொடர்பாக சாம்னா தலையங்கத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.
சோனியா காந்திக்கு வயதாகி வருகிறது. பிரியங்கா காந்தி முழு நேர அரசியலில் ஈடுபடுவதை நான் பார்க்கவில்லை. கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்களால், ராகுல்காந்தி பணி செய்ய முடியாமல் உள்ளார்.
பத்திரிகையாளன், ஆசிரியராக நான் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகி பார்த்தது இல்லை. ராகுல் காந்தி தான் காங்கிரசில் போட்டியின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர். நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி தேவைப்படுவதால் காங்கிரஸ் எழுச்சி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல காங்கிரசுக்கு முழு நேர தலைவர் வேண்டும் என 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதிய விவகாரம் குறித்து சாம்னாவில், “ ராகுல் காந்தியின் தலைமையை காலி செய்ய தேசிய அளவிலான சதியில் உட்கட்சியை சேர்ந்தவர்களே ஈடுபட்டு உள்ள நிலையில், கட்சி அதை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும். இந்த வயதான காவலர்கள் ராகுல்காந்தியை உள்ளுக்குள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சேதத்தை பாரதீய ஜனதா கூட அவருக்கு செய்யவில்லை.
எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கட்சியை அல்லாமல், அவர்களின் இடங்களை தக்க வைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவேளை அது சரியான பாதையில் செல்லவில்லையென்றால், பாரதீய ஜனதாவுக்கு மாறிவிடுகின்றனர். இதுதான் அவர்கள் காட்டும் ஒரே செயல்பாடாக உள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என்ன செய்ய முடியும்?. இது புதிய அரசியல் கொரோனா வைரஸ்” என கூறப்பட்டுள்ளது.