பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்: கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் - கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்
கொரோனா அறிகுறி இருந்தால் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தி உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய மாவட்ட அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ பரிசோதனை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. மேற்படி புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் ஒரு சில நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தும் எவ்வித பரிசோதனை செய்யாமல் இருந்ததன் விளைவாக கால தாமதமாக அரசு மருத்துவமனைக்கு நாடி வருகிறார்கள்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி அறிக்கையின்படி கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 7 நாட்களாக மருத்துவ சிகிச்சை எதும் செய்யாமல் காய்ச்சலில் இருந்துள்ளார். அவரது உறவினர் கூறியதன் அடிப்படையில் மேற்படி நபரை சுகாதார பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியதின் அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து சேரும் போது, சுவாச திணறல் காரணமாக இறப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களில் சிலர் இரண்டு, மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்தாலும் அலட்சியமாக வீட்டில் இருந்து பின்னர் உடலில் நுரையீரல் உள்பட முக்கிய பகுதிகளில் அதிகம் தாக்கம் ஏற்பட்ட பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இது மிகவும் வருந்ததக்க கூடிய ஒன்றாகும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை மையத்தில் கலந்து கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
காய்ச்சல், இருமல், சளி மற்றும் தொண்டை வலி இருப்பின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு அபாயகரமான நிலைக்கு செல்வதை தவிர்த்து உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.