பெரம்பலூர், அரியலூரில் புதிதாக 62 பேருக்கு கொரோனா
பெரம்பலூர், அரியலூரில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அரியலூர்,
பெரம்பலூர் நகரை சேர்ந்த 4 பேர் மற்றும் கிராம பகுதிகளான எளம்பலூர், சிறுவாச்சூர், வாலிகண்டபுரம், கூத்தூர், நத்தக்காடு, நொச்சிக்குளம், எஸ்.ஆடுதுறை, வி.களத்தூர், கீழப் பெரம்பலூர், லெப்பைக்குடிகாடு, அகரம்சிகூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 பேர் என மொத்தம் 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 18 பேரும் பெரம்பலூர், திருச்சி, சிறுவாச்சூர், அரியலூர், சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 20 பேர் குணம் அடைந்துள்ளனர். 16 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 185 பேர் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், சென்னை, புதுக்கோட்டை, சிறுவாச்சூர், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம், பாதிப்பு எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதன்மூலம், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.