ஐகோர்ட்டை திறக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை உள்ளிட்ட நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதற்கு சில வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் விசாரணையில் பல இடையூறுகள் உள்ளதால், நீதிமன்றங்களை திறக்கவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து வழக்குகளை விசாரிக்கலாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். வக்கீல் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகின்றன.
அந்த வகையில், சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “நீதிமன்றங்கள் திறக்காததால் வக்கீல்கள் பலர் வருமானம் இழந்துள்ளனர். வறுமையின் காரணமாக திருச்செந்தூர், பொன்னேரி உள்ளிட்ட ஊர்களில் வக்கீல்கள் தற்கொலை செய்துள்ளனர். மதுக்கடை திறப்பது முக்கியமா? நீதிமன்றங்கள் திறப்பது முக்கியமா? அனைத்து தொழில்களும் இயங்கும்போது நீதிமன்றங்களை மட்டும் மூடி வைப்பது நியாயம்தானா?” என்று அச்சடிக்கப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் நீதிமன்றங்களை திறக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.