வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து ஜனவரியில் தொடக்கம்
வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரெயில் பணிகளை டிசம்பரில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்கிறார். இதையடுத்து ஜனவரியில் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்குகிறது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீட்டிக்கும் பணி கள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாதையில் சோதனை ஓட்டமும், தொடர்ந்து ஜூன் மாதம் ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதங்கள் பணிகள் முடங்கியது. தற்போது பணியில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி, சுரங்க ரெயில் நிலையங்களுக்கு செல்லும் வழிகள் மற்றும் தண்டவாளம், சிக்னல் அமைப்பதற்கான பணிகள், ரெயில் நிலையம் அமைக்கும் பணி உள்பட அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
கொருக்குப்பேட்டை ரெயில் நிலைய பணிகளுக்கு இடையே, டோல்கேட் பகுதியில் இருந்து உயர்த்தப்பட்ட பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் டோல்கேட்டில் இருந்து கவுரி ஆசிரமம் வரை உள்ள பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளன. இந்த பாதை பணி நிறைவடைந்த உடன் வருகிற டிசம்பர் மாதம் பாதுகாப்பு கமிஷனர் இந்த பாதையில் ஆய்வு செய்ய உள்ளார்.
அதனைதொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இந்த பாதையில் பயணிகள் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. விம்கோ நகரில் 2-வது பணிமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் முதல் இந்த பணிமனையும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.