கரூர் அருகே, சரக்கு ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை - கல்லூரிக்கு பணம் கட்ட முடியாததால் பரிதாபம்

கரூர் அருகே கல்லூரிக்கு பணம் கட்ட முடியாததால் மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-24 22:15 GMT
கரூர், 

கரூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் கிரண்யா(வயது 19). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கிரண்யாவின் தாய், தந்தை ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், பூ வியாபாரம் செய்து வரும் தனது பாட்டி வீட்டில் தங்கி, கிரண்யா படித்து வந்தார்.

இவருக்கு ஒரு அக்காள் மற்றும் ஒரு அண்ணன் உள்ளனர். இந்நிலையில் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வந்த கிரண்யா, மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கரூர்- திருச்சி ரெயில்வே தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த கிரண்யா, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு ரெயில் முன்பு திடீரென பாய்ந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் அங்கு வந்து, உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்