ஒரே நாளில் 273 பேருக்கு தொற்று சேலத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது

சேலத்தில் நேற்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-08-24 22:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 261 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 161 பேர் பாதிக்கப்பட்டனர்.

நங்கவள்ளியில் 22 பேர், ஆத்தூரில் 19 பேர், வீரபாண்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 11 பேர், ஓமலூரில் 10 பேர், சங்ககிரியில் 9 பேர், எடப்பாடி, மகுடஞ்சாவடியில் தலா 6 பேர், பனமரத்துப்பட்டியில் 3 பேர், சேலம் ஒன்றியம், காடையாம்பட்டியில் தலா 2 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம், தாரமங்கலம், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 2 பேர், திருச்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 173 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்