அரியலூரில், புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று - பெரம்பலூரில் மேலும் 26 பேர் பாதிப்பு

அரியலூரில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் மேலும் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-08-24 22:00 GMT
அரியலூர்,

பெரம்பலூர் நகரை சேர்ந்த 6 பேர் மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூர், ஆலம்பாடி, எசனை, காரை, ஆலத்தூர் கேட், கொளக்காநத்தம், லெப்பைக்குடிக்காடு, வாலிகண்டபுரம், மலையாளபட்டி, கிழுமத்தூர், பரவாய், அசூர், சிறுகுடல், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 பேர் என மொத்தம் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து 26 பேரும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 957 பேர் குணம் அடைந்துள்ளனர். 15 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 209 பேர் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், சென்னை, புதுக்கோட்டை, சிறுவாச்சூர், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும் என மொத்தம் 52 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,280 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 1,475 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 24 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 525 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சிகிச்சையில் குணமடைந்து 68 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்