செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 306 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்குகிறது.

Update: 2020-08-25 02:16 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொடிகாத்த குமரன் நகரில் வசிக்கும் 27, 32 வயதுடைய வாலிபர்கள், வள்ளல் பாரி தெருவை சேர்ந்த 21, 24 வயது வாலிபர்கள் உள்பட 13 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 2 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வல்லாஞ்சேரி, ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதியில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 806 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 20 ஆயிரத்து 857 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 378 ஆக உயர்ந்தது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர், 80 வயது மூதாட்டி, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 2 மூதாட்டி, 35 வயதுடைய 2 பெண்கள், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது 2 வாலிபர்கள் உள்பட 8 பேர் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 324 பேர் ஆஸ்பத்திரியில் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 212 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 759 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 19 ஆயிரத்து 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலியானோரின் எண்ணிக்கை 376 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்