அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-24 03:15 GMT
மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 30). இவருடைய அண்ணன் சிலாவட்டம், மதுராந்தகம், அருங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நபர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள், சீட்டு பணத்தை செந்தில்நாதனிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். இதனால் அவமானம் தாங்க முடியாத செந்தில்நாதன் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அடுத்த வாரம் திருமணம்

இது குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட செந்தில்நாதனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்