தர்மபுரி மாவட்டத்தில், வங்கி மேலாளர் உள்பட 23 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் வங்கி மேலாளர் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2020-08-23 22:15 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் 51 வயது மேலாளருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கொரோனா தொற்று உறுதியானது.

இதேபோல் தர்மபுரி பிடமனேரியை சேர்ந்த 28 வயது வங்கி ஊழியர், 60 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர், போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 47 வயது போலீஸ்காரர், குமாரசாமிப்பேட்டையை சேர்ந்த 2 வயது குழந்தை, அளே தர்மபுரியை சேர்ந்த 51 வயது கட்டிட காண்டிராக்டர், இலக்கியம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவர், சோகத்தூர் கிளை சிறையில் பணிபுரியும் 40 வயது சமையல்காரர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல் அவ்வைவழி பகுதியை சேர்ந்த 42 வயது ஆண், தர்மபுரி நேருநகரை சேர்ந்த 50 வயது பெண், 52 வயது ஆண், மொரப்பூரில் பணிபுரியும் 52 வயது வேளாண்துறை அலுவலர், பாலவாடியை சேர்ந்த 31 வயது தனியார் மருத்துவமனை பெண் ஊழியர், மோதூரை சேர்ந்த 42 வயது பெண், 46 வயது விவசாயி, 55 வயது பெண், பென்னாகரத்தை சேர்ந்த 23 வயது பெண், புதூரை சேர்ந்த 55 வயது தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதேபோல் பாப்பாரப்பட்டியை சேர்ந்த 40 வயது தனியார் மருத்துவமனை பெண் ஊழியர், பாலக்கோடு சீரியனஅள்ளியை சேர்ந்த 23 வயது தனியார் நிறுவன ஊழியர், கம்மாளப்பட்டியை சேர்ந்த 40 வயது ஆட்டோ டிரைவர், தீர்த்தமலையை சேர்ந்த 30 வயது பேக்கரி ஊழியர், பி.பள்ளிப்பட்டியை சேர்ந்த 21 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 23 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,112 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்