ராணுவவீரரின் மனைவி, தாயை கொலை செய்தகுற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்

ராணுவவீரரின் மனைவி, தாயை கொலை செய்தகுற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்.

Update: 2020-08-22 01:48 GMT
காரைக்குடி,

சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் 14-ந் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், முடுக்கூரணி கிராமத்தில் ராணுவ வீரரின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 22-ந் தேதி சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது குறித்து நேரடியாக விசாரித்து வந்தேன். பின்னர் இந்த சம்பவம் குறித்து டி.ஜி.பி. திரிபாதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தினேன். இதுவரை இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றத்தையே தருகிறது. காவல்துறை மீதுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி விட்டது. குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்