கொரோனாவால் விழா எளிமையாக நடக்கிறது விநாயகர் சதுர்த்தி இன்று தொடக்கம் சிலை கரைக்க கடும் கட்டுப்பாடு பக்தர்கள் கூடுவதற்கும் தடை
கொரோனா பரவல் காரணமாக மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று எளிமையாக தொடங்குகிறது. மும்பையில் சிலை கரைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பக்தர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
விநாயகர் சதுர்த்தி இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும் மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக மும்பை பெருநகரத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று தொடங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஆனந்த சதுர்த்தியுடன் முடிகிறது. வழக்கமாக இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் 11 நாட்களும் மும்பையே திருவிழா கோலம் காணும். மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா்களை தரிசிக்கவும், சிலைகளை கரைக்கவும் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளுக்கு வருவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட மாநில அரசு பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை ஏற்று லால்பாக் ராஜா போன்ற பிரபல மண்டல்களும் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட உள்ளன. பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழா தொடர்பாக அரசு மேலும் பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. இதில் மாநில அரசு, மண்டல்களில் 4 அடி உயரத்துக்கு மேலும், வீடுகளில் 2 அடி உயரத்துக்கு மேலும் சிலை பிரதிஷ்டை செய்ய கூடாது, சிலை பிரதிஷ்டை செய்யவோ அல்லது கரைக்கவோ 5 பேருக்கு மேல் ஊர்வலமாக செல்ல கூடாது, தினமும் மண்டல்களில் நடைபெறும் பூஜைகளில் அதிகம் பேர் கலந்து கொள்ள அனுமதி இல்லை, ஒலி மாசு விதிகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இதேபோல சிலையை கரைக்க வெளியே வருபவர்கள் முககவசம் அணிந்து அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதேபோல மும்பை மாநகராட்சி பொது மக்கள் தாங்களாக சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க தடைவிதித்து உள்ளது. வழக்கமாக பொது மக்கள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்து வந்து பூஜை செய்து கரைப்பார்கள். இந்த ஆண்டு பொது மக்கள் அப்படி செய்ய முடியாது. இந்த ஆண்டு பொது மக்கள் வீட்டிலேயே சிலைக்கு பூஜை செய்துவிட வேண்டும்.
பின்னர் அதை வீட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவிற்குள் உள்ள இயற்கை நீர்நிலைகள் அல்லது செயற்கை குளங்கள் அமைந்து இருக்கும் பகுதிகளில் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சியினர் அந்த சிலைகளை கரைப்பார்கள் என மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் பொது மக்களிடம் சிலைகளை பெற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. இதேபோல அடுக்குமாடி குடியிருப்புகளில் செயற்கை குளம் வெட்டி சிலைகளை கரைக்கவும் மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
இதேபோல பிரபல மண்டல்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் தரிசனத்துக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மண்டல்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கு கட்டாயம் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி பிறப்பித்து உள்ளது.
மும்பையை போல தானே, நவிமும்பை, வசாய் பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.
இந்த நிலையில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “பொதுமக்கள் வீட்டிலேயே விநாயகர் சிலைகளை கரைத்து கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் அருகே உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கொரோனா பரவலுக்கு வாய்ப்பு அளித்து விடாமல் விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும். சிலை ஊர்வலத்துக்கு அனுமதி கிடையாது. எந்த காரணத்தை கொண்டும் கூட்டம் கூடக்கூடாது” என்றார்.
இந்தநிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி தாதர் பூ மார்க்கெட்டில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. பொது மக்கள் கொரோனாவை மறந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பூ, பூஜை பொருட்கள், அலங்கார பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொது மக்கள் தேவையின்றி கூட்டம் கூடுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல அரசின் வழிகாட்டுதல்களை மண்டல் நிா்வாகிகள் பின்பற்றுகிறார்களா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.