எதிரியாக மாறிவிட்டார் ஹிருத்திக் ரோஷனை உண்மையாக காதலித்தேன் - கங்கனா ரணாவத்
தற்கொலைக்கு இந்தி பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா ரணாவத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இளம் நடிகர் சஷாந்த் சிங் தற்கொலைக்கு இந்தி பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா ரணாவத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியையும் சாடினார். தற்போது சுஷாந்த் சிங்கின் இன்னொரு காதல் மற்றும் ஹிருத்திக் ரோஷனுடன் தனக்கிருந்த காதல் போன்றவற்றை பற்றி பேசி இருக்கிறார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், “சுஷாந்த் சிங். சாரா அலிகான் காதல் பற்றி ஏற்கனவே ஊடகங்களில் வந்துள்ளது. எதற்காக இந்த நட்சத்திர குழந்தைகள் வெளியில் இருந்து வரும் நடிகர்களை ஆசையில் விழ வைத்து பிறகு விட்டு விடுகிறார்கள். அதன்பிறகு சுஷாந்த் சிங் எதற்காக கழுகிடம் சிக்கி கொண்டார் என்பதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும் சுஷாந்த் சிங்கை சாரா அலிகான் உண்மையாக காதலித்து இருப்பார் என்று நம்புகிறேன். சாராவுக்கு அழுத்தம் ஏற்பட்டதால் விலகி இருக்கலாம். நானும் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் திடீரென்று எதற்காக ஒரு எதிரிபோல மாறினார் என்பது எனக்கு மர்மமாகவே உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள் கங்கனாவை கண்டித்துள்ளனர்.