கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி புதிதாக 84 பேருக்கு தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் பலியாகினர். மேலும் புதிதாக 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2020-08-21 04:10 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5096 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 500-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 84 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5180 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 3 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

3 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் குட்டியாம்பாளையத்தை சேர்ந்த 54 வயது பெண் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சிறுவத்தூரை சேர்ந்த 39 வயது நபர், சென்னை அரசு மருத்துவமனையிலும், பாலூரை சேர்ந்த 54 வயது நபர் சேலம் அரசு மருத்துவமனையிலும் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் நேற்று காலை பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்