கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். அப்சல் அனைவரையும் வரவேற்றார். வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், ராகுல் பேரவை குட்டி என்கிற விஜயராஜ், அமாவாசை, ஏழுமலை சாந்தாம்மாள், ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரைராஜ் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்தார். முன்னாள் மாநில காங்கிரஸ் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உறுதி மொழி வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சந்திரசேகர், சதாசிவம், சொக்கலிங்கம், ராஜேந்திரன், செல்வம், அன்வர், சவுகத், மாபூப், அன்பரசு, அண்ணாதுரை, பட்டதாரி அணி நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கொத்தூர் சையத் முனீர் அகமத் நன்றி கூறினார்.
காங்கிரஸ் அலுவலகம்
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்டத் தலைவர் சுப்ரமணி தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வின்சென்ட் முன்னிலை வகித்தார். பர்கூர் நகர தலைவர் வெங்கட்டப்பன், நகர துணைத் தலைவர் இருதய நாதன், மாவட்ட செயலாளர் லண்டன் கோபால், மாவட்ட செயலாளர் சங்கர், காவேரிப்பட்டணம் வட்டாரத் தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா 4 ரோடு சந்திப்பில் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், வட்டார காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் விஜிகுமார், தெற்கு வட்டார தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், வட்டார பொருளாளர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சாதிக்பாஷா, நாகராஜ், சிங்காரப்பேட்டை துணை தலைவர் மணி, முன்னாள் நகர செயலாளர் முத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 76-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள பூ மார்க்கெட் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகர தலைவர் நீலகண்டன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சாதிக் கான் வரவேற்றார். இதில், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், கொத்தூர் முனிராஜ். பிரபாகரன், மகேந்திரன், அக்பர், பண்ணு, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆதில் நன்றி கூறினார்.