ராஜீவ்காந்தி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2020-08-21 01:05 GMT
புதுச்சேரி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை அவர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், நிர்வாகிகள் நீல.கங்காதரன், ஏ.கே.டி.ஆறுமுகம், கண்ணபிரான், வீரமுத்து, தனுசு, இளையராஜா, மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மாணவர் காங்கிரசார், அதன் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் ராஜீவ் ஜோதி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் ராஜீவ்காந்தி சிலையை அடைந்ததும் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்